பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Wednesday, September 26, 2018

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்




பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நிதி நெருக்கடி காரணமாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது. நூலகங்களுக்கு புதிய புத்தங்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர, காஞ்சிபுரம், கோவையில் உள்ள நூலகங்களுக்கு தனியார் மூலம் இணைய சேவை வழங்கப்படு வருகிறது என்றார்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி 2,000-த்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad