உதவி பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு - Asiriyar.Net

Sunday, September 30, 2018

உதவி பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு





சட்ட கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.அரசு சட்ட கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 186 காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக, இந்தாண்டு, ஜூலை, 18ல் நியமன அறிவிக்கை வெளியானது. இதற்கான போட்டி தேர்வுக்கு, ஆக., 6 வரை ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிந்தது. ஆனால், டி.ஆர்.பி.,யில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களால், தேர்வை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி, ஒரு வாரத்திற்கு முன் வெளியானது. இதையடுத்து, உதவி பேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு, அக்., 14 முதல், 17 வரை தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தேர்வு தேதி விபரங்களை, http://trb.tn.nic.in/law2018 என்ற, இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Post Top Ad