இதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம்!. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க!. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 29, 2018

இதய நோய் ஏற்படுவதற்கு இது தான் காரணம்!. நீங்க இந்த லிஸ்ட்ல இருந்தால், கண்டிப்பா இந்த பழக்கத்தையெல்லாம் விட்டுவிடுங்க!.


நமது வாழ்கை முறையில் சிறியவர் முதல் முதியவர் வரை இதய நோய் தாக்கிவருகிறது. இன்றைய வாழ்கை முறையில் தினசரி நாம் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். என்றாவது ஒரு உடல் அசதி அல்லது உடல் நல குறைப்பாட்டின் காரணமாக அதிக நேரம் தூங்கலாம் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

தினமும் 8 மணிநேரத்திற்கு அதிகமாக தூங்குவதால் உடல் நலமானது பாதிக்கப்படுகிறது. மேலும் இதயநோய் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்குபவர்களை விடவும், அதிக நேரம் தூங்குபவர்களுக்கு 3 மடங்கு இதயநோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் கூறப்படுகிறது.


கொழுப்பு உள்ள உணவு வகைகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. உடற்பயிற்சி இல்லாமல் தினமும் சாப்பிடுவது, தூங்குவது இவற்றை வழக்கமாய் கொண்டிருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் கூறுகின்றனர்.

அதிகமாக மாமிசம், மது, புகை போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கு இதய நோய் வர அதிக வாய்ப்புள்ளதாகவும் சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். மேலும் உணவு அருந்திய பின்பு குளிர்ந்த நீரை அருந்துபவர்களுக்கும் இதய நோய் ஏற்படும் என கூறுகின்றனர். உணவிற்கு பின்னர் வெந்நீர் அருந்துவதே சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Post Top Ad