RTE - மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் கட்டணத்தை அரசு வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, May 21, 2023

RTE - மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் கட்டணத்தை அரசு வழங்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

 




கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவருக்கான சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்களையும் அரசு வழங்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ், குடியாத்தம் தாலுகா, புவனேஸ்வரிபேட்டையில் உள்ள லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளியில் சேர்க்கை பெற்ற சுவேதன் என்ற மாணவரிடம், சீருடை, பாட புத்தகங்களுக்காக 11 ஆயிரத்து 977 ரூபாய் கட்டணமாக செலுத்தும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது 


இதனால், மாணவரின் தந்தை மகாராஜா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்களை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை.


இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களுக்கான செலவுகளை அரசு, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை 2 வாரங்களில் கல்வித்துறை செயலாளர் பிறப்பிக்க வேண்டும். 


25 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது. மாநில அரசிடம் தான் அத்தொகையை கோர வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கும் வலியுறுத்த வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் மாணவருக்கு தேவையான சீருடை, பாட – புத்தகங்களை உடனடியாக சம்மந்தப்பட்ட வழங்க வேண்டும். அதற்கான தொகையை பள்ளி நிர்வாகம் அரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Post Top Ad