குரூப் 4 தேர்வர்களின் புதிய கோரிக்கை.. நிறைவேற்றுமா அரசு? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 12, 2023

குரூப் 4 தேர்வர்களின் புதிய கோரிக்கை.. நிறைவேற்றுமா அரசு?

 

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் தட்டச்சர் உள்ளிட்ட காலி பணியிடங்களை கூடுதலாக நிரப்ப வேண்டும் என போட்டி தேர்வு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தமிழகம் முழுவதும் கடந்த 2022 ஆம் ஆண்டு அரசு அலுவலர்களின் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் தட்டச்சர் பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 


கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை காலி பணியிடங்கள் தமிழக அரசு நிரப்புவது வழக்கம். ஆனால் தற்போது மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளதால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 


இந்நிலையில் தமிழக அரசு கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் 7301 பணியிடங்களை மட்டுமே நிரப்புவதாக அறிவித்துள்ளது. இதனால் குரூப் 4 தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். 


எனவே கூடுதலாக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என போட்டித் தேர்வு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்தபட்சம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 15000 பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 



Post Top Ad