ஆசிரியரை பதட்டமாக வைப்பது தான் ‘ அரசின் நோக்கமா??? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 21, 2022

ஆசிரியரை பதட்டமாக வைப்பது தான் ‘ அரசின் நோக்கமா???

 

''பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒருவித பதட்டத்துடன் பணியாற்ற வேண்டும் என நினைப்பது தான் 'திராவிட மாடல்' அரசின் நோக்கமா ,'' என, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் ஏ.முத்துப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவர் கூறியதாவது:

அடிப்படை வசதி இல்லாத கிராம பள்ளிகளில் ஆன்லைனில் புள்ளிவிபரம் கேட்பது வாடிக்கை ஆகிவிட்டது. 2019 ல் ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து அ.தி.மு.க., அரசின் தவறான நடவடிக்கை ஆசிரியர், அரசு ஊழியர்களை வீறு கொண்டு எழ செய்தது. அப்போது இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் அளித்தார்.


ஆனால் இன்றைய நிலை ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருப்பது கல்வித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


குழு அமைத்து பள்ளிகளை ஆய்வு செய்வதில் ஆசிரியர்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அவை அச்சப்படும் அளவிற்கு செயல்படுத்துவதை ஏற்க முடியாது. ஆய்வுகள் ஆலோசனை வழங்கும் ஆக்கப்பூர்வ பணியாக இல்லாமல் ரகசியம் கடைபிடிக்கப்படுகிறது.


பள்ளியில் ஆசிரியர்கள் ஒருவித பதட்டத்துடன் பணியாற்ற வேண்டும் என நினைப்பது தான் ' திராவிட மாடல்' அரசின் நோக்கமா என தெளிவுபடுத்தவேண்டும். ஆண்டுதோறும் அடிப்படை வசதி, புதிதாக கட்ட வேண்டிய, அகற்ற வேண்டிய கட்டடம் குறித்து கேள்விகள் தான் கேட்கிறார்கள். ஆனால் தீர்வு இல்லை. பாடபுத்தகம், பயன்படாத பதிவேடுகள் மட்டுமே கல்வி என நினைப்பது அதிகாரிகள் எண்ண ஓட்டம்.


ஆனால் மாணவர்களுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்து அவர்களை நல்லவர்களாக வார்த்தெடுப்பது ஆசிரியரின் கனவு. இதனால் ஆய்வுகளை கண்டு குழப்பம் அடையாமல் தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறோம், என்றார்.






Post Top Ad