மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி தரவரிசைக் குறியீடு - 3-வது இடத்தில் தமிழகம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 9, 2022

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி தரவரிசைக் குறியீடு - 3-வது இடத்தில் தமிழகம்!

 



மத்திய அரசு வெளியிட்டிருக்கும் பள்ளிக்கல்வி தரவரிசைக் குறியீட்டில் புதுச்சேரியும், தமிழகமும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. மொத்தம் உள்ள 1,000 புள்ளிகளில் 950 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ’1’ என்ற உயரிய மதிப்பை பெற்றிருக்கின்றன.


மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டு தரவரிசை குறியீட்டை நேற்று வெளியிடப்பட்டது மத்திய அரசு. அதில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10 வரிசைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 1,000 புள்ளிகளில் 950 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் `1’ என்ற உயரிய மதிப்பை பெற்றிருக்கின்றன.


இந்த செயல்பாட்டு வரிசை குறியீட்டின்படி தமிழகம், புதுச்சேரி முறையே 855 மற்றும் 897 புள்ளிகளுடன் மூன்றாவது நிலையில் உள்ளன. கற்றல் வெளிப்பாடுகள் பிரிவில் 132 புள்ளிகளையும், அணுகல் பிரிவில் 78 புள்ளிகளையும், உள்கட்டமைப்பு வசதிகளில் 131 புள்ளிகளையும், சமத்துவம் பிரிவில் 183 புள்ளிகளையும், ஆளுகை நடைமுறை பிரிவில் அதிகபட்சமாக 331 புள்ளிகளையும் தமிழகம் பெற்றுள்ளது. 


அதேபோல கற்றல் வெளிப்பாடுகளில் 121 புள்ளிகளையும், அணுகலில் 76 புள்ளிகளையும், உள்கட்டமைப்பு வசதிகளில் 136 புள்ளிகளையும், சமத்துவ பிரிவில் 220 புள்ளிகளையும், ஆளுகை நடைமுறையில் 340 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது புதுச்சேரி.




Post Top Ad