ஆசிரியர்களுக்கான அறிவியல் மாநாடு நடைபெறுதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் செய்து பரிசோதனை அறிவியல் பாடங்களை தானாக கற்றலை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட வானவில் மன்றம் , வகுப்பறை கற்றல் கற்பித்தலிலும் புதுமையாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து படைப்பாற்றலுடன் வரும் அறிவியல் மற்றும் கணித செயல்பட்டு ஆசிரியர்களுக்கான ஆசிரியர் மாநாடு நடத்துவதாக திட்டமிடப்பட்டது.
தமிழ்நாட்டின் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித வகுப்பறைகளில் நடைபெறும் புதுமையான கற்றல் கற்பித்தல் முறைகளை பயன்பாட்டு நோக்கில் ஆய்வு செய்து ஆய்வு கட்டுரைகளை பகிரும் மேடையாக ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு வழிகாட்டப்பட்டது.
இந்த அடிப்படையில் மாநிலம் முழுவதிலும் இருந்து 643 ஆசிரியர்கள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை மண்டல வாரியாக சமர்ப்பிக்கும் வண்ணம் மேற்கு , தெற்கு , மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிற மார்ச் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கீழ்காணும் பட்டியல் அடிப்படையில் மாநாடுகள் நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது.
Click Here to Download - DSE - Science Conference - Director Proceedings - Pdf
Click Here to Download - Science Conference - Selected Teachers List - Pdf
No comments:
Post a Comment