2025-26 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கையை அதிகபடுத்திய DEO பெயர் பட்டியல்
Dr. P.A. NARESH
Director, of Elementary Education Dept. of School Education.
DPI Campus, College Road, Chennai - 600006.
கல்வி என்பது சொல் அல்ல ஆயுதம், அந்த ஆயுதத்தை அனைவரும் பெறவேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம்.
அரசுப் பள்ளிகளே பெருமையின் அடையாளம் என்பதை உறுதிசெய்யும் பொருட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை, திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர் நிகழ்ச்சி மார்ச் 1-ஆம் தேதியன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் மாண்புமிகு துணை முதல்வர் மற்றும் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அதனடிப்படையில், ஆக்கப்பூர்வமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முடித்த அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காகவும் அதிகமான மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக
கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஆசிரியர்கள் மூலம் ஏற்படுத்தியமைக்காகவும் இந்த 2025-26 ஆம் கல்வியாண்டில் 01.03.2025 முதல் 20.03.2025 வரை உள்ள நாள்களில் அதிகமான அளவில் மாணவர் சேர்க்கையை நிகழ்த்திக் காட்டியமைக்குக் கீழ்க்கண்ட மாவட்டக் கல்வி அலுவலர்களைப் (தொடக்கக் கல்வி) பாராட்டி மகிழ்வதோடு இச்சிறப்புமிகு பணிக்கு உறுதுணையாக இருந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.
No comments:
Post a Comment