மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு - Asiriyar.Net

Friday, March 28, 2025

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

 



மத்திய ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்துள்ளது.


மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக டிஏ (Dearness Allowance) என்பார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். அதாவது நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வைத்து அகவிலைப்படி என்பது மாற்றி அமைக்கப்படும்.


கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் வரை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad