தமிழ்நாடு பட்ஜெட் 2025 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கிடைக்குமா? - Asiriyar.Net

Friday, March 14, 2025

தமிழ்நாடு பட்ஜெட் 2025 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கிடைக்குமா?

 




தாக்கல் செய்யப்படும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பட்ஜெட்டில் அனைத்து அரசு ஊழியர்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்ப்பு.


மார்ச் 14, வெள்ளிக்கிழமை) 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களை மனதில் ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதுகுறித்து பார்ப்போம். 


சமீபகாலமாக தமிழ்நாடு கவர்மெண்ட் எம்ப்ளாயிஸ் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த நிறைய விஷயம், இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறது. அதிலும் முக்கியமாக ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் மற்றும் காலி அரசு பணியிடங்களை நிரப்புவது உட்பட பல கோரிக்கைகள் உள்ளன. 


திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றாமல் இருக்கிறது. இதே போக்கு நீடித்தால் 2026 சட்டசபை தேர்தலில் அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு இருப்பதால்,  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோபத்தை தணிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக அரசு இருக்கிறது. நாளை தாக்கல் செய்யக்கூடிய பட்ஜெட்டில் அரசு ஊழியர்களை மகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் பல அறிவிப்புகள் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதேபோல் மாதம் மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடும் முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார்கள். ஆனால் இன்னும் அது நிறைவேற்றாமல் இருக்கிறது. எனவே இது சம்பந்தமாக பட்ஜெட்டில் அறிவிப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. 


எனவே நாளை தாக்கல் செய்யப்படும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பட்ஜெட்டில் அனைத்து அரசு ஊழியர்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும்.


ஏற்கனவே புதுச்சேரி அரசாங்கம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். அதில் ஒரு சில முக்கியமான அறிவிப்புகளை அறிவித்துள்ளார்கள். அதாவது மாதம் மாதம் குடும்பத்தலைவிகளுக்கு தலா ₹2500 கொடுக்கப்போவதாக கூறியுள்ளனர். இது மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. 


No comments:

Post a Comment

Post Top Ad