பள்ளிகளில் சாதி - மாணவர்களை எச்சரித்த நீதிபதி - கண்டித்து அறிவுரை - Asiriyar.Net

Monday, March 24, 2025

பள்ளிகளில் சாதி - மாணவர்களை எச்சரித்த நீதிபதி - கண்டித்து அறிவுரை

 



திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட பிளஸ் 2 மாணவர்கள் 4 பேரை போலீசார் நீதிக்குழுமம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தேர்வுக் காலம் என்பதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காத இளைஞர் நீதிக்குழும நீதிபதி, கண்டித்து அறிவுரை கூறி அனுப்பினார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 2 மாணவர்களை அவதூறாக குறிப்பிடும் வார்த்தைகளை பள்ளி மேஜைகளில் எழுதி வைத்ததாக புகார் எழுந்தது.


இதன் காரணமாக 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது, மேலும் இது ஜாதி ரீதியாகத் தீவிரமடைந்தது. இந்த விவகாரத்தில், ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் போலீசாரிடம் சிக்கினர்.


இவர்கள் நான்கு பேரையும் போலீசார் திருநெல்வேலி இளைஞர் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர் செய்தனர். தற்போது தேர்வுக் காலம் என்பதால், 'இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது' என அவர்களை எச்சரித்த நீதிபதி, கடும் நடவடிக்கை எடுக்காமல், கண்டித்து அனுப்பி வைத்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad