அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? - மத்திய அரசு வெளியிட்ட தகவல் - Asiriyar.Net

Wednesday, March 19, 2025

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? - மத்திய அரசு வெளியிட்ட தகவல்

 



இந்தியாவில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. அதேவேளை, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.


இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்த மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா? என்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டுள்ளது.


அதில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை, ஓய்வு வயதை குறைக்கும் திட்டமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad