JACTTO GEO போராட்டத்தை நீர்த்து போக செய்கிறார்கள்? - போராட்டத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளி போட முடிவு? - Asiriyar.Net

Tuesday, March 4, 2025

JACTTO GEO போராட்டத்தை நீர்த்து போக செய்கிறார்கள்? - போராட்டத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளி போட முடிவு?

 




அரசு ஊழியர்கள் போராட்டம் ஜூனுக்கு தள்ளி போட முடிவு


தேர்வு நேரம் என்பதால் அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளி போட திட்டமிட்டு உள்ளனர்


 பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமீபத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்


அடுத்த கட்ட போராட்டத்தை இம்மாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர் சட்டசபை கூட்டம் முடியும் வரை போராட்டத்தை தள்ளி போட வேண்டும் என அவர்களிடம் அமைச்சர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது 


இந்நிலையில் போராட்டம் தொடர்பாக புதிய முடிவை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளனர்


இதுகுறித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது


தேர்வு நேரம் என்பதால் போராட்டத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போட திட்டமிடப்பட்டுள்ளது ஆனால் பிரச்சினையை ஆறு போடவில்லை 


பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழு நான்கு வாரம் அவகாசம் கேட்டுள்ளது அதன் பின் அவர்களை மீண்டும் சந்தித்து பேசுவோம்


என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறிந்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்தினால் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்



1 comment:

  1. ஜாக்டோ ஜியோ என்பது திமுகவின் கைக்கூலி என்ற உண்மை மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது

    ReplyDelete

Post Top Ad