உலக மகளிர் தினம் - வினாடி வினா கேள்விகள் - Asiriyar.Net

Saturday, March 8, 2025

உலக மகளிர் தினம் - வினாடி வினா கேள்விகள்

 




International Women's Day - Quiz Questions


1. இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை - கல்பனா சாவ்லா


2. இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் - இந்திராகாந்தி


3. தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்த முதலமைச்சர் - ஜெயலலிதா


4. தமிழ்நாட்டின் சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை அமைச்சர் - கீதா ஜீவன் 


5. நோபல் பரிசு வென்ற முதல் பெண்மணி யார்? - மேரி கியூரி ( இயற்பியல் & வேதியியல் என இரண்டு தனித்தனி அறிவியல் துறைகளில் நோபல் பரிசுகளை வென்ற ஒரே நபர் இவர்தான். கதிரியக்கத்தன்மையில் முன்னோடி ஆராய்ச்சிக்காக அறியப்பட்ட இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர். அவர் இரண்டு புதிய கூறுகளைக் கண்டுபிடித்தார் - அவை : ரேடியம் மற்றும் பொலோனியம்)


6. இந்திய அரசின் நிதி அமைச்சர் - நிர்மலா சீதாராமன்


7. பெண்களுக்கான சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த மட்டையாளர் - மிதாலி ராஜ்


8. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி


9. புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை - சானியா மிர்சா


10. புகழ்பெற்ற இந்திய இறகுப் பந்தாட்ட வீராங்கனை - பி.வி.சிந்து


11. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதன்முதலில் வழங்கிய நாடு எது, எந்த ஆண்டு? நியூசிலாந்து, 1893


12. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்? டாக்டர் ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி


13. இந்திய இராணுவத்தில் சேர்ந்த முதல் பெண் - பிரியா ஜிங்கன்


14. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் - சாவித்ரிபாய் புலே


15. இந்தியாவின் முதல் பெண் பல் மருத்துவர் - டாக்டர் விம்லா சூட்


16. மகளிர் தினம் முதன் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது? -  மார்ச் 19, 1911


17. இந்தியாவிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்


18. புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததி ராய்


19. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி


20. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதிபா பாட்டீல்


- உலக மகளிர் தின வாழ்த்துகள்




No comments:

Post a Comment

Post Top Ad