பிகார் - அரசு பள்ளிகளில் புதிதாக 51,389 ஆசிரியர்கள் நியமனம்! - Asiriyar.Net

Monday, March 10, 2025

பிகார் - அரசு பள்ளிகளில் புதிதாக 51,389 ஆசிரியர்கள் நியமனம்!

 




பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,389 ஆசிரியர்களுக்கு, முதல்வர் நிதீஷ் குமார் இன்று நியமனக் கடிதங்களை வழங்கினார்.


இதனையடுத்து பிகாரில் மொத்த அரசு ஆசிரியர்களின் எண்ணிக்கை 5,65,427 ஆக உயர்ந்தது. இதற்கு முன்பு ஆசிரியர்கள் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நியமிக்கப்பட்டனர்.


கல்வி வளர்ச்சியில் மாநிலத்தின் கவனத்தை வலியுறுத்திய முதல்வர் நிதீஷ் குமார், இதற்காக பட்ஜெட்டில் 22% நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பாக பெண் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.


இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவரான தேஜஷ்வி யாதவ், அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை விமர்சித்துள்ள நிலையில், மாநில வேலை வாய்ப்புகளில் பின்தங்கிய சமூகத்தினருக்கு 65% இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வர யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad