ஆணை : 2022-2023ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் குறித்து கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
“ ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி , வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் ரூ .1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மாணவர்களின் நுண்ணறிவுத் திறன் , செயல்பாட்டுத் திறன் , ஆளுமைத் திறன் என பல்வேறு திறன்களை சதுரங்கப் போட்டிகளின் வழியே வெளிக்கொணர பள்ளியளவில் தொடங்கி மாவட்ட , மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்திடவும் , சென்னையில் வரும் ஜீலை , ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்களை பார்வையாளர்களாக பங்கேற்கச் செய்திடவும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மேற்காண் அறிவிப்பு குறித்து மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி ஆணையர் பின்வரும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Click Here to Download - GO 110 - Chess Competition -Pdf




No comments:
Post a Comment