மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் இடம்பெறத்தக்க வாசகங்கள் - Asiriyar.Net

Friday, June 10, 2022

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் இடம்பெறத்தக்க வாசகங்கள்

 


மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் இடம்பெறத்தக்க வாசகங்கள் சில...!



1. பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திடுவோம். 

2. பள்ளி வயதுக் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீர், பள்ளிக்கு அனுப்புங்கள்.

3. கல்வி என்பது குழந்தையின் அடிப்படை உரிமை. 

4. சமதர்ம சமுதாயம் நிலைபெற ஒரே வழி கல்வி. 

5. குழந்தைகளே நாட்டின் கருவூலம். 


6. குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்புவோம், நூறு விழுக்காடு சேர்க்கை இலக்கை அடைவோம். 

7. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. 

8. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியே உயிர்நாடி. 

9. ஐந்து வயது நிரம்பிய பின் வீட்டில் இருப்பது நியாயமா? 

10. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் அனைவரையும் படிக்க வைப்போம் 


11. பெண்களை படிக்க வைப்போம் சமுதாய வளர்ச்சிக்கு வழி வகுப்போம் 

12. புத்தகச் சுமையின்றி முப்பருவ முறையில் படித்திடுவோம் 

13. பள்ளிக்குச் செல்வோம் பல்கலை அறிவோம் 

14. அனைவரும் படிப்போம் அகிலத்தை வெல்வோம். 

15. கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்















No comments:

Post a Comment

Post Top Ad