13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டத்தை ஜூன் 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்ததிட்டம் 2022-23-ம் கல்வியாண்டில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இதற்காக அரசுமற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குஏற்கெனவேதிறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம்வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள்மீண்டும் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல்நாளிலேயே எண்ணும், எழுத்தும் திட்டத்தையும் அமல்படுத்த முடிவாகியுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் வரவேற்பு
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதுதவிர கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கும் நிகழ்வும் அந்த வளாகத்திலேயே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment