13ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் அறிவிப்பு - Asiriyar.Net

Monday, June 6, 2022

13ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் அறிவிப்பு

 




தமிழகத்தில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை திட்டமிட்டபடி 13ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.


திருச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி:


தமிழக முதல்வர் உத்தரவின்படி மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு 234 தொகுதிகளிலும் கலெக்டர் தலைமையில் தீர்வுகாண வேண்டும். திருச்சி மாவட்டத்தில் பல மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 


சில மனுக்கள் பரிசீலனை செய்து, அதற்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.ஆட்சியில் இல்லாதபோதும், இருக்கும் போதும் கலைஞரின் கொள்கைப்படியே மாநிலத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும். திட்டமிட்டபடி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை வரும் 13ம் தேதியும், 12ம் வகுப்புக்கு 20ம் தேதியும், 11ம் வகுப்பிற்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.




No comments:

Post a Comment

Post Top Ad