ஜூலை 2-இல் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு - Asiriyar.Net

Sunday, June 19, 2022

ஜூலை 2-இல் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு

 




தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை (எஸ்.எம்.சி.) ஜூலை 2-ஆம் தேதி மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.


இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத்திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதிய எஸ்எம்சி குழுக்கள் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் ஏற்படுத்தப்பட்டன.


இதைத் தொடா்ந்து, அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 2-ஆம் தேதி (சனிக்கிழமை) எஸ்எம்சி மறுகட்டமைப்பு நடத்தப்பட வேண்டும். இதுசாா்ந்து பெற்றோா்களுக்கு ஒருவாரத்துக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.


இந்தப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலா்களை நியமித்து புகாருக்கு இடமளிக்காவண்ணம் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இதுதொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad