EMIS - கல்வித்துறை அதிகாரிகள் மறைமுக உத்தரவு? - Asiriyar.Net

Friday, April 15, 2022

EMIS - கல்வித்துறை அதிகாரிகள் மறைமுக உத்தரவு?

 

எமிஸ் பதிவில் 100 சதவீதம் கவனம்: 'அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பாடம் எடுக்க வேண்டாம்' கல்வித்துறை அதிகாரிகள் மறைமுக உத்தரவு

  பத்திரிகை செய்தி


அரசு பள்ளிக்கூடங் களில் ஆசிரியர்கள் 100 சதவீதம் எமிஸ் பதிவேற் றம் செய்வதில் கவனம் செலுத்தினால் போதும் என்று கூறி மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று மறைமுக உத்தர விட்டு உள்ளனர்.

100 சதவீதம்.. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூட ஆசி ரிய-ஆசிரியைகளுக்கு ஈரோடு எமிஸ் (இ.எம்.ஐ.எஸ்.) குழுவில் பணியாற்றி வரும் அதிகாரிகள் சார்பில் ஒரு தக வல் பறிமாறப்பட்டு உள்ளது. அதில், ஆசிரிய ஆசிரியைகள் எமிஸ்பதிவு மற்றும் அது தொடர்பான பணிகளில் 100 சத வீதம் கவனம் செலுத்தினால் போதும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் வருகை மிகவும் குறைந்து உள்ளது. கொரோனாவுக்கு பின்னர் அவர்களுக்கு கற்றுக்கொடுப் பது புதிதாக சொல்லிக்கொ டுப்பது போன்று சவாலான பணியாக இருப்பதாக ஆசி ரிய-ஆசிரியைகள் தெரிவிக்கி றார்கள்.


இதுபற்றி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

கொரோனா காலத்தில் மாணவ-மாணவிகளுக்கு கற் பித்தலுக்காக இல்லம்தேடி கல்வி தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இப் போது இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு மிக மிக முக்கி (யத்துவம் அளித்து, அந்த திட் டத்தில் மாணவ-மாணவி களை சேர்ப்பதை அதிகாரி கள் கட்டாயப்படுத்தி வருகி றார்கள். ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக இல்லம்தேடி கல்வி திட்ட வகுப்பில் மாலை நேரத்தில் படிக்க வேண்டும் என்றும், அப்படி மாணவ-மாணவி கள் அந்த திட்டத்தில் சேர வில்லை என்றால் கட்டாயப் |படுத்தி சேர்க்க வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியஆசிரியைகளுக்கு கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், அந்த விவ ரத்தை எமிஸ் இணையத்தில்  பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.


கல்வி வளர்ச்சிக்கு.... தற்போது 100 சதவீதம் மாணவ-மாணவிகளுடன் அரசு பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. விரை வில் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆசிரியர்கள் முழு மூச்சாக பாடம் கற்றுக் கொடுத்தால், அடுத்த ஆண்டு மாணவ-மாணவிகள் செல் லும்வகுப்புக்கு தயார் செய்து விடமுடியும். 


ஆனால் மணி நேரம்பணியாற்றும் ஆசிரியஆசிரியைகள் பாடம் எடுக்கா மல் எமிஸ் பதிவுகளை மட் டும் செய்ய வேண்டும் என் றும், மாலையில் ஒரு மணி நேரம்பணியாற்றும் தன்னார் வலர்கள் முழுமையாக குழந் தைகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்றும் உத்தர விட்டு, மறைமுகமாக மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுக்க வேண்டாம் என்று அதிகாரி கள் உத்தரவிட்டு உள்ளனர் இது எந்த வகையில் கல்வி வளர்ச்சிக்கு உதவும் என்று தெரியவில்லை இவ்வாறு அவர் கூறினார்.








Post Top Ad