2022 சுபகிருது - தமிழ் புத்தாண்டு ராசி பலன் - Asiriyar.Net

Friday, April 15, 2022

2022 சுபகிருது - தமிழ் புத்தாண்டு ராசி பலன்

சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள். இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

 மேஷம்: 

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு வளர்ச்சியைத் தரப்போகிறது. எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் ஆண்டின் தொடக்கத்தில் குருவும், சனியும் சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய், சந்திரனோடு இணைந்து சந்திர மங்கள யோகத்தையும், தனாதிபதி சுக்ரன் புதனோடு சேர்ந்து புத சுக்ர யோகத்தையும் உருவாக்குகிறார்கள். தொழில் ஸ்தானாதிபதி சனி தொழில் ஸ்தானத்திலேயே பலம் பெற்று இருக்கிறார். எனவே இந்த ஆண்டு இனிய பலன்கள் ஏராளமாக கிடைக்கப்போகிறது.

 ரிஷபம்: 

இந்த ஆண்டில் உங்கள் குடும்பத்தினருடன் அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது மிகவும் நல்லது. இதனால் பல வழிகளில் இருந்து பணம் கைக்கு வரும். சனிப்பெயர்ச்சிக்கு பின் வீடு, வாகனம் போன்ற யோகம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். இதுவரை ஆரோக்கியத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி இணக்கம் அதிகரிக்கும்

ரிஷபம்: இந்த ஆண்டில் உங்கள் குடும்பத்தினருடன் அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது மிகவும் நல்லது. இதனால் பல வழிகளில் இருந்து பணம் கைக்கு வரும். சனிப்பெயர்ச்சிக்கு பின் வீடு, வாகனம் போன்ற யோகம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். இதுவரை ஆரோக்கியத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி இணக்கம் அதிகரிக்கும்

 மிதுனம்: இந்த ஆண்டில் குடும்பத்தில் நல்ல விசேஷங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நீங்கள் கடனாக கொடுத்த பணம் இந்த ஆண்டில் கைக்கு மொத்தமாக கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தம்பதியர்களுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி, இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும்.

 கடகம்: இந்த ஆண்டில் உங்களை அனைவரும் புரிந்து கொண்டு நடப்பார்கள். தம்பதிகளுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டில் செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள். சொந்தமாக தொழில் செய்வதற்கான வாய்ப்புக்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வெளியே அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இந்த ஆண்டில் மன ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், யோகா, தியானம் போன்றவற்றை தினமும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

 சிம்மம்: தமிழ் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கப் போகிறது. இதுவரை எதிலும் தடைகளையும், கஷ்டங்களையும் சந்தித்து வந்த நீங்கள், படிப்படியாக அந்த சூழலில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் இந்த ஆண்டில் முடிவுக்கு வரும். திடீரென்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.

 கன்னி: தமிழ் புத்தாண்டில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும். குடும்ப சூழலில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். இந்த ஆண்டில் திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துவது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். பெற்றோரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அதிக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருங்கள். தொழில் ரீதியாக உங்கள் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.தம்பதிகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

 துலாம்: இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணிபுரிபவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கு. தம்பதிகளுக்கு இடையே நல்ல புரிதல் இருக்கும். ஆகவே திருமண வாழ்க்கை சந்தோஷம் நிறைந்து இருக்கும்.

 விருச்சிகம்: தமிழ் புத்தாணடில் அவசரமாக எதையும் செய்யாமல், பொறுமையைக் கடைப்பிடித்தால் நற்பலன்கள் கிடைக்கும். கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து விடுபடுவார்கள். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இந்த ஆண்டில் கிடைக்கும். தம்பதியருக்கு இடையே உள்ள கருத்துவேறுபாடுகள் நீங்கும். வியாபாரிகள், பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நற்பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடு செய்ய நினைத்தால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

 தனுசு: இந்த ஆண்டில் அனைத்தையும் கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உடன்பிறப்புகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை ஊக்குவிப்பார்கள். வீடு, வாகனம் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் நற்பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு, திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைப்பதில் தாமதமாகும். பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சுக்கிரன் அருளால் தம்பதிகளுக்கு திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

 மகரம்: இந்த ஆண்டில் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. கடந்த கால முதலீடுகள் மற்றும் சேமிப்புகளால் நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் நற்பலன்கள் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தம்பதிகளுக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 கும்பம்: சுபகிருது தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. இந்த ஆண்டில் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. கடந்த கால முதலீடுகள் மற்றும் சேமிப்புகளால் நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் நற்பலன்கள் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

 மீனம்: இந்த ஆண்டில் எந்த பிரச்சனை வந்தாலும் மனம் தளர்ந்துவிடாமல் தைரியமாக எதிர்த்துப் போராடுங்கள். ஆண்டின் நடுப்பகுதியில் குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுக்கு தேவையானதை கடினமாக போராடிய பின்னரே அடைவீர்கள். இந்த ஆண்டில் பொறுமையாக இருந்தால் நற்பலன்களைப் பெறலாம். தொழில் ரீதியாக, பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியஙததைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உணவில் கவனம் செலுத்தினால் அதைத் தவிர்க்கலாம். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

Post Top Ad