போராட்ட காலத்தில் இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை, மீண்டும் பழைய இடத்தில் நியமிக்க வேண்டும் என, ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில் விடுத்துள்ள அறிக்கை:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ ஜியோ' சார்பில், 2019ல் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்றதற்காக, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், பல ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில், போராட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன், மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பழைய இடத்தில் பணியமர்த்த, பொது மாறுதல் கவுன்சிலிங்கின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, போராட்ட காலத்தில் மாற்றப்பட்ட ஆசிரியர்களின் இடமாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து, அவர்களை பழைய இடங்களில் பணி அமர்த்த, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment