பள்ளிக்கல்வி அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை மனு - Asiriyar.Net

Saturday, December 4, 2021

பள்ளிக்கல்வி அமைச்சரிடம் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை மனு

 




தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை பள்ளிக் கல்வி அமைச்சரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு தலைமைச் செயலகத்தில் மேற்கண்ட கூட்டணியின் செயலாளர்கள், பிரதிநிதிகள் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவை சந்தித்து கொடுத்தனர். 


இது குறித்து தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் தாஸ் கூறியதாவது:  புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டு வர வேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களை திரும்ப பழைய பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை நிறைவேற்ற பள்ளிக் கல்வி அமைச்சரிடம் கோரி வருகிறோம். அதற்கான மனுவை இன்று நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாவிடம் கொடுத்துள்ளோம் என்றார்.







No comments:

Post a Comment

Post Top Ad