அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான துறை தேர்வுகள் அறிவிப்பு - Asiriyar.Net

Sunday, May 2, 2021

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான துறை தேர்வுகள் அறிவிப்பு

 







அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறை தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தொடர்பாக, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,வாயிலாக, துறை தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வு, ஜூன், 22 முதல், 30 வரை நடக்கும். இதில் பங்கேற்க உள்ளவர்கள், வரும், 28க்குள், 'ஆன்லைன்' வழியே பதிவு செய்ய வேண்டும்.



காலை, 9:30 முதல், 12:00 மணி வரையிலும்; பிற்பகல், 2:30 முதல், 5:00 மணி வரையிலும், இரண்டு பிரிவுகளாக தேர்வுகள் நடக்கும். கணினி வழியிலும், எழுத்து தேர்வாகவும் நடத்தப்படும். அதற்கேற்ப வினாத்தாள்கள் அமைக்கப்படும். அதேபோல, புத்தகங்களை பார்த்து எழுதுவது மற்றும் மனப்பாடம் செய்து எழுதுவது என்ற, இரண்டு முறைகளும் உண்டு. முழு விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad