ஈரோடு அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மவுலி, தருண்ஸ்ரீ, விஜய், மிதுன் ரித்தீஷ் ஆகிய நான்கு மாணவர்களும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மதியம் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நான்கு பேரும் வீடு திரும்பாத நிலையில் அவர்களின் பெற்றோர் காஞ்சிகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் துறையினர் மாணவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் காவல் துறையினர் சக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் படிப்பதற்கு அதிக செலவாவதால் பெற்றோர்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லை என காணாமல் போன மாணவர்கள் கூறியது தெரிய வந்ததுள்ளது.
இதற்கிடையே, விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே நான்கு மாணவர்களும் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அங்கே விரைந்துள்ளனர்.
No comments:
Post a Comment