கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால் இது குறித்த விரிவான தகவலை நாம் அறிந்துகொள்வது அவசியம். அந்தவகையில் நோயின் அறிகுறிகள் பின்வருமாறு,
பொதுவாக இது ஒரு வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த நோய் என்பதால் சளி, இருமல், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் நிமோனியா உள்ளிட்ட வைரஸும் சேர்ந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் இந்த நோயிலிருந்து மீண்டு வர ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பலவீனமானவர்கள் மட்டுமே இந்த நோய்க்கு பலியாகின்றனர். இதுவரை பலியானவர்கள் அனைவரும் எதிர்ப்பு சக்தி இல்லாமல் பலவீனம் வாய்ந்தவர்களாக இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.