பொலிவு பெறும் அரசு பள்ளிகள்: மாணவர் சேர்க்கை அதிகரிக்க முயற்சி - Asiriyar.Net

Sunday, April 14, 2019

பொலிவு பெறும் அரசு பள்ளிகள்: மாணவர் சேர்க்கை அதிகரிக்க முயற்சி


குடியாத்தம்R.வெங்கடாபுரம் அரசுப்பள்ளி
அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, பொலிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு வீழ்ச்சி அடைந்து வந்தது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் வசதிகள் செய்து தரப்படுகின்றன


 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதனால், வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது


பள்ளி கல்வி துறை உத்தரவுப்படி, இப்போதே மாணவர் சேர்க்கை துவங்கி விட்டது.வழக்கமாக, மாணவர் சேர்க்கைக்கு முன், பெற்றோரை கவர, தனியார் பள்ளிகள் வர்ணம் அடித்து பொலிவூட்டப்படும்


ஜானகிராமன் தேவராசன். இடைநிலை ஆசிரியர்.

 இதே பாணியை தற்போது அரசு பள்ளிகளும் கடைபிடிப்பது, பள்ளி மற்றும் சுற்றுச்சுவர்களில் ஓவியம் வரையப்படுகிறது


 வரும் கல்வியாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்

Post Top Ad