இன்ஜி., சேர்க்கைக்கான பதிவு மே, 2ம் தேதி ஆரம்பம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 22, 2019

இன்ஜி., சேர்க்கைக்கான பதிவு மே, 2ம் தேதி ஆரம்பம்

பி.இ., -- பி.டெக்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 2ம் தேதி துவங்குகிறது.

இட ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங், ஜூன், 20ல் துவங்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ள இவை, உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அங்கீகாரத்தின் கீழ், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. ரசு ஒதுக்கீடுஇந்தக் கல்லுாரிகளில், அரசு இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க, தமிழக அரசின் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளில், 50 சதவீதம், மற்ற கல்லுாரிகளில், 65 சதவீத இடங்கள், கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.இந்த கவுன்சிலிங்கை, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் அடங்கிய, அரசின் மாணவர் சேர்க்கை கமிட்டி நடத்தும்.'இந்த ஆண்டு, பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி பணிகள்உள்ளதால், அவர்களால் கவுன்சிலிங்கை நடத்த முடியாது' என, தமிழக உயர்கல்வித்துறைக்கு, துணைவேந்தர், சுரப்பா கடிதம் எழுதினார். எனவே, 'இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, உயர்கல்வித் துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும்' என, உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அறிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசு அறிவிக்கை, தமிழக உயர்கல்வித் துறையால், இன்று வெளியிடப்படுகிறது.

இதன்படி, கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 2ம் தேதி துவங்க உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, ரேண்டம் எண் ஒதுக்கீடு போன்ற பணிகள் முடிந்து, ஜூன், 17ல், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.கவுன்சிலிங் எப்போது?இதையடுத்து, சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, ஜூன், 20ல், நேர்முக கவுன்சிலிங் துவங்க உள்ளது. தொழிற்கல்வி பிரிவினருக்கு, ஜூன், 25ல், மாணவர்கள் நேரடியாக பங்கேற்கும் கவுன்சிலிங் நடக்கும். பொது பிரிவினருக்கு, ஜூலை, 3ல் ஆன்லைன்வழி கவுன்சிலிங் துவங்கி, அதேமாதம், 30ல், நிறைவடையும்.

அனைத்து மாணவர்களும், ஆன்லைன் வாயிலாக மட்டுமேவிண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு பிரிவினர், தொழிற்கல்வி பிரிவினர் மட்டும், நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.விண்ணப்ப பதிவுக்கு, மாணவர்களுக்கு உதவும் வகையில், மாநிலம் முழுவதும், சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த மையங்களிலேயே, சான்றிதழ் சரிபார்ப்பும் நடக்கும். மாணவர்களின் மொபைல் போன் எண், இ - மெயில் முகவரிக்கு, கவுன்சிலிங் குறித்த, அனைத்து தகவல்களும் அவ்வப்போது அனுப்பப்படும் என, உயர் கல்வித்துறை அறிவித்து உள்ளது.கவுன்சிலிங் எப்படி?கவுன்சிலிங்கை பொறுத்தவரை, ஆன்லைன் கவுன்சிலிங், நேர்முக கவுன்சிலிங் என, இரண்டாக நடத்தப்படுகிறது.

 சிறப்பு பிரிவில் இட ஒதுக்கீடு பெறும், மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினர், விளையாட்டு பிரிவு, அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் மீதமாகும் இடங்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும் துணை தேர்வு எழுதி வரும் மாணவர்களுக்கான துணை கவுன்சிலிங் ஆகியவற்றுக்கு, மாணவர்கள் நேரடியாக பங்கேற்க வேண்டும். இதற்கான இடம், பின்னர் அறிவிக்கப்படும்.அதேநேரம், சிறப்பு இடஒதுக்கீடு இல்லாமல், பொதுவான தரவரிசையில் வரும் மாணவர்களுக்கு மட்டும், ஆன்லைன் வழியில் கவுன்சிலிங்நடத்தப்படும். இதற்கு, அந்த மாணவர்கள்,சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும், அவரவர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, இன்ஜினியரிங் கவுன்சிலிங் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். ஆன்லைன் பதிவுக்கோ, இடங்களை தேர்வு செய்யவோ, நேரடியாக செல்ல தேவையில்லை.

இணையதளத்தில் வீட்டில் இருந்தவாறே, இடஒதுக்கீட்டை பெறலாம். இணையதள கவுன்சிலிங்குக்கு உதவி தேவைப்படுவோர், சேவை மையங்களுக்கு சென்றால், அங்குள்ளவர்கள் இணையதள கவுன்சிலிங்குக்கு உதவுவர்.

Post Top Ad