பத்தாம் வகுப்புக்கு ஜூன் மாதம்உடனடி சிறப்புத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கான தத்கால் விண்ணப்ப பதிவு 23-ல் தொடக்கம் - Asiriyar.Net

Monday, April 22, 2019

பத்தாம் வகுப்புக்கு ஜூன் மாதம்உடனடி சிறப்புத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கான தத்கால் விண்ணப்ப பதிவு 23-ல் தொடக்கம்






ஜூன் மாதம் நடக்கவுள்ள பத்தாம் வகுப்பு உடனடி சிறப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் தத்கால் முறையில் ஏப்ரல் 23, 24-ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறைஅறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:பத்தாம் வகுப்புக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளது.பொதுத்தேர்வு எழுத தவறிய தனித்தேர்வர்கள் உடனடி சிறப்புத் தேர்வுக்கு இணையதளம் மூலம் கடந்த ஏப்ரல் 8 முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பை தவறவிட்ட தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தத்கால்) வரும் 23.24-ம் தேதிகளில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு சென்று இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.தேர்வெழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், கட்டணமாக ரூ.675 செலுத்த வேண்டும். பதிவு செய்த பின்னர் தரப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில், அதிலுள்ள விண்ணப்ப எண்ணை கொண்டுதான் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

இப்போதைய சமச்சீர் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் சிறப்பு தேர்வே இறுதி வாய்ப்பாகும். மேலும், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் மட்டுமேதேர்வு எழுத முடியும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad