புதிய மாணவர் சேர்க்கை - உடனுக்குடன் EMIS ல் பதிவு செய்ய உத்தரவு - Commissioner Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, June 29, 2022

புதிய மாணவர் சேர்க்கை - உடனுக்குடன் EMIS ல் பதிவு செய்ய உத்தரவு - Commissioner Proceedings

 

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஏற்கனவே கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) பதிவு செய்யப்பட்டுள்ளன.


 தற்போது பள்ளிக்கல்வித் துறையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் அரசு / அரசு உதவி பெறும் / பிறவகை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் 1 ஆம் வகுப்பில் புதியதாக சேரும் மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் 6 , 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட விவரங்கள் Common Pool- லிருந்து எடுத்து உரிய பள்ளியில் பதிவுகளை கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) செய்யப்பட வேண்டும்.


 அனைத்துவகை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பதிவு விவரங்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) பதிவு செய்தால் மட்டுமே துல்லியமாக மாணவர்கள் எண்ணிக்கை விவரம் அறிய இயலும் என்பதால் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களையும் தங்கள் பள்ளி சார்ந்த விவரங்களை EMIS- ல் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad