பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.04.2022 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 4, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.04.2022

 




திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்: நட்பியல்


அதிகாரம்: பகைமாட்சி


குறள் : 865


வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க் கினிது.


பொருள்:

நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்


பழமொழி :

who sows thorns will never reap grapes.

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?


இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நடை, ஆடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன். 


2. ஆசிரியர்கள் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் ஆக நடந்து கொள்வேன்.


பொன்மொழி :


ஒருவர் தனது அறிவின் வரம்புகளை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு." ___ சீனப் பழமொழி


பொது அறிவு :


1. நதிகள் இல்லாத நாடு எது? 


ஓமன். 


2. தோல் மூலம் வியர்வையினை வெளியிடாத விலங்கு எது? 


நாய்.


English words & meanings :


Artificial - which is not natural, செயற்கையான, 

adhesives - objects used for sticking, ஓட்டும் பொருள்.


ஆரோக்ய வாழ்வு :


காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.பார்வைக்கு மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய், நீரிழிவு, இதய நோய் உடல் பலவீனம்,ஆகியவற்றை சரிசெய்யும்.நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.


கணினி யுகம் :


F2 - Edit the selected cell. 

F5 - Go to the specific cell


ஏப்ரல் 04 - மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களின் பிறந்தநாள்


மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (Manonmaniyam P. Sundaranar, ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது.[4] சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.  மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.


மார்டின் லூதர் கிங் அவர்களின் நினைவுநாள்




மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968)[1] ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.[2] பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1955 இல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார். அம்மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.


நீதிக்கதை


நரியின் தேடுதல்


ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஒரே குஷி... நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்! என்று ஊளையிட்டது.


கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது. பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது. ஆஹா... பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்.... சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி.


இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது. அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை. ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது. ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ? என்று பயந்தது. பிறகு, இல்லை.. இல்லை.. நான் உயிரோடு தான் இருக்கிறேன். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும் என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது. இந்த நரியின் கற்பனை மாதிரி தான். சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக்கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா? என்று ஏங்கி வாடுகின்றனர். காலை நரி போல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம். மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம்.


இன்றைய செய்திகள் - 04.04.2022


* நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை வரும் 6ம் தேதி முதல் தொடங்குகிறது. முன்னதாக, இன்று முதல் ஆன்லைனில்  விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது 6ம் தேதிக்கு மாற்றப்ப்பட்டுள்ளது.


* யுனிசெப் போன்ற ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் பாரத்

பயொடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளது. மேலும், கோவக்சின் தடுப்பூசி பெற்ற நாடுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.


*வரும் 7ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாக வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.


*1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளதால், 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயத்தேர்ச்சி செய்யப்படுவார்கள் 

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

* மகளிர் உலகக் கோப்பையை 7வது முறையாக ஆஸ்திரேலியா தட்டிச்சென்றுள்ளது.



Today's Headlines


* The application process for the Common Entrance Test (CUET) for admission of undergraduate students in Central Universities in the country will start on the 6th of this month. Earlier, it was announced that applications will be accepted online from today.  But, it has now been shifted to the 6th.


 * United Nations organizations like UNICEF Bharat Biotech have stopped purchasing the Kovac vaccine.  It also called on countries vaccinated against coxsackie to take appropriate action.


 * Chennai Meteorological department warns of possible low pressure in the Bay of Bengal on the 7th.


 * It has been informed that the final examination of the year will be held from 1st to 9th class.  Also, as the Right to Compulsory Education Act is in force, everyone will be compulsory up to 8th standard

 As reported.

  

 * Australia wins the Women's World Cup for the 7th time.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்



Post Top Ad