தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...?? - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 10, 2022

தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...??

 


மலை சுழற்சியால் பாதிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் மலை சுழற்சி அரசாணை-404  தொடக்கக் கல்வித் துறையில் தொடரும் என்ற தொடக்கக்கல்வி இயக்குனரின் கடிதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்தனர்.


தமிழக அரசு தடையை நீக்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. எனவே இன்னும் சில நாட்களில் மலை சுழற்சி தடையை முறையாக நீதிமன்றத்தில் நீங்கும் என்றும் ,மாவட்ட மாறுதல் கண்டிப்பாக நடைபெறும் என தெரிகின்றது.


மழை சுழற்சியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் (மலை சுழற்சி உள்ள மாவட்டங்களில்) மற்றும் மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற தடை நீங்கியவுடன் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு நடைபெறும் இது குறித்து பல்வேறு குழுக்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் இத் தகவல் பகிரப்பட்டுள்ளது.


தகவல் பகிர்வு


✍🏻✍🏻 மாநில தலைமை

SSTA-2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு
Post Top Ad