சானிடைசர் தரமானதா என எப்படி கண்டுபிடிப்பது? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 5, 2021

சானிடைசர் தரமானதா என எப்படி கண்டுபிடிப்பது?

 







மும்பை நகரிலும், மகாராஷ்டிரா முழுவதிலும் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் தரம் குறைந்தவை என்று இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் அறிவித்துள்ளது. லாபம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே சில நிறுவனங்கள் இந்தச் சந்தையில் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளன என்றும், அவர்களுடைய பொருள்கள் உரிய தரத்தில் இல்லை என்றும் அந்தச் சங்கம் கண்டறிந்துள்ளது.


கிருமிநாசினி பயன்படுத்துவது என்பது நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு பாதுகாப்புக் கேடயம் போல கிருமிகளை நீக்கும் இந்தக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துகிறோம். நம் பணியிடத்திலோ அல்லது பயணத்திலோ இதைப் பயன்படுத்துகிறோம். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கிருமிநாசினிகளுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.



சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சில நிறுவனங்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன. எனவே, கிருமிநாசினி என்ற பெயரில் சில போலி பொருட்களும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.


சந்தையில் விற்கப்படும் சில கிருமிநாசினிகள் "99.9 சதவீத வைரஸ்களை கொல்லும்," "மணத்துடன் கூடிய கிருமிநாசினி", "ஆல்கஹால் மூலப்பொருளின் அடிப்படையிலான கிருமிநாசினி" என்றெல்லாம் விளம்பரங்களுடன் வருகின்றன.



கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஆல்கஹால் மூலப்பொருளின் அடிப்படையிலான கிருமிநாசினிகளை பயன்படுத்துவதற்கு நாம் எல்லோரும் முன்னுரிமை தருகிறோம்.


ஆனால் நீங்கள் சரியான கிருமிநாசினியைத்தான் பயன்படுத்துகிறீர்களா? அந்தக் கிருமிநாசினிகளில் பக்கவிளைவுகள் ஏதும் இருக்கின்றனவா? இந்தக் கிருமிநாசினிகள் உங்கள் தோலுக்கு உகந்ததாக இருக்குமா? தரம் குறைந்த மற்றும் கலப்படமான கிருமிநாசினிகள் சந்தையில் கிடைப்பதால், இவையெல்லாம் முக்கியமான கேள்விகளாக உள்ளன.



நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் செயல்பட்டு வரும் இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் இதுகுறித்து ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்பிள்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவை கலப்படமானதாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.




சானிடைசர் ஆய்வு என்ன சொல்கிறது?

122 கிருமிநாசினி சாம்பிள்கள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

45 சாம்பிள்கள் கலப்படமானவை என கண்டறியப்பட்டது.

மனிதர்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய மெத்தனால் ஐந்து சாம்பிள்களில் இருப்பது தெரிய வந்துள்ளது.

59 சாம்பிள்களில் மட்டுமே அவற்றின் மீது ஒட்டியுள்ள லேபிள்களில் உள்ளவாறு பொருட்கள் சேர்க்கப் பட்டுள்ளன.



"சந்தையில் இருந்து பெறப்பட்ட 120 சாம்பிள்களில் வாயு நிறப்பிரிகை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 45 சாம்பிள்கள் கலப்படமானவை என கண்டறியப்பட்டது. அதாவது அதன் லேபிள் மீது குறிப்பிட்டுள்ளவாறான, பொருட்கள் அதில் சேர்க்கப்படவில்லை'' என்று இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். காமத் பிபிசியிடம் தெரிவித்தார்.


Post Top Ad