6ம் தேதி முதல் கடைகள் அடைப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 5, 2021

6ம் தேதி முதல் கடைகள் அடைப்பு

 







தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, மே, 1 முதல் மறு உத்தரவு வரும் வரை, இரவு, 10:00 முதல், அதிகாலை, 4:00 மணி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.


இந்நிலையில், நோய் பரவல் அதிகரித்து வருவதால், நாளை மறுதினம், 6ம் தேதி அதிகாலை, 4:00 முதல், 20ம் தேதி காலை, 4:00 மணி வரை, புதிய கட்டுப்பாடுகளை, நேற்று இரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அதன் விபரம்:



* அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், அதிகபட்சம், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது


* பயணியர், மெட்ரோ ரயில், தனியார், அரசு பஸ்கள், வாடகை டாக்சி ஆகியவற்றில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், பொது மக்கள் அமர்ந்து பயணிக்க, அனுமதிக்கப்படுகிறது.


* வணிக வளாகங்களில் இயங்கும், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை கடைகள் மட்டும், 'ஏசி' வசதியின்றி, பகல், 12:00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.



* மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது


* மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


* அனைத்து உணவகங்களிலும், பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள், பகல், 12:00 மணி வரை மட்டுமே செயல்படலாம்.



* உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.


* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை


* ஏற்கனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி ஊரகப் பகுதிகளில் உள்ள, அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.



* சனி கிழமைகளில் மீன் மார்க்கெட், கோழி இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில், காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


* இதுதவிர ஏற்கனவே நடைமுறையில் உள்ள, கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் தொடரும். இவ்வாறு, தமிழக அரசு அறிவித்துள்ளது.





Post Top Ad