ஆசிரியர் பணிநிரவல் / புதிய பணியிடம் உருவாக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் - RTI - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 22, 2020

ஆசிரியர் பணிநிரவல் / புதிய பணியிடம் உருவாக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் - RTI

 


பள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநரிடம் பெற்ற RTI தகவல்.


துரித அஞ்சல்/ தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005

பள்ளிக் கல்வித்துறை,

சென்னை -600 006

ஓ. மு. எண் 66334 /சி3 /இ1 / 2017,  நாள். 10.10.2017


அனுப்புநர்

பொதுத் தகவல் வழங்கும் அலுவலர்

மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை),

பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6.




பெறுநர்


திரு.ஆ.சுப்பிரமணியன்,

பட்டதாரி ஆசிரியர் (தமிழ்),

அரசு மேல்நிலைப் பள்ளி,

சின்னகாமன்பட்டி,

விருதுநகர் மாவட்டம்.


அய்யா,


பொருள்:


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - திரு.ஆ.சுப்பிரமணியன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்கள் கோருதல் - சார்பு.



பார்வை: சம்மந்தப்பட்ட மனுதாரரின் மனு நாள்.15.09.2017 (இவ்வியக்ககத்திற்கு பெறப்பட்ட நாள்.17.09.2017)



பார்வையில் காணும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவலுக்கு கீழ்க்கண்டவாறு மனுதாரருக்கு தகவல் அளிக்கப்படுகிறது.




1) ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அறிவியல்-கணிதம்-சமூகஅறிவியல்- தமிழ்-ஆங்கிலம் என்ற பாடகழற்சியின் அடிப்படையில் நிர்ணயம் மேற்கொள்ளப்படவேண்டும்.



2) மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி கணக்கிடப்பட்டு உபரி ஆசிரியர்களை கணக்கிடும் பொழுது சமநிலையில் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலம்-தமிழ்-சமூக அறிவியல்-கணக்கு-அறிவியல் என்ற பாடச்சுழற்சி முறையில் பணிநிரவல் செய்யப்படுவர்.






3) ஒரு பள்ளியில் குறிப்பிட்ட பாடத்தில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்படும் பொழுது அப்பள்ளியில் அக்குறிப்பிட்ட பாட ஆசிரியர் இறுதியாக பணியில் சேர்ந்தவரே இளையவராக கருதப்படுவார்.



4) பணிநிரவல் எனக் கணக்கிடும்பொழுது பணியாற்றும் பள்ளியில் இறுதியாக சேர்ந்த நாளில் உள்ளவர் இளையவராகக் கருதப்படுவார்.



பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை)



Post Top Ad