பள்ளிகள் திறப்பு - விரைவில் நல்ல முடிவு - முதல்வர் பழனிசாமி பேச்சு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 11, 2020

பள்ளிகள் திறப்பு - விரைவில் நல்ல முடிவு - முதல்வர் பழனிசாமி பேச்சு

 






கொரோனா பரவல் தொடங்கியபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நாகர்கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். குமரியில் கொரோனாவால் 15,024 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காய்ச்சல் முகாமை நடத்தியதால் நோய் பரவல் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். 


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு நடத்தினார். இதன் பின்னர் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். 




இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; குமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பலரும் சென்று வருகின்றனர். திருவனந்தபுரத்தில் ஏற்கனவே கொரோனா பரவல் அதிகளவில் உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் திருவனந்தபுரத்தில் இருந்து குமரிக்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் சதாவ் அதானிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, நாகர்கோவில் நகராட்சி 18 ஆவது வார்டு தெருவுக்கு சதாவ் அதானியின் பெயர் சூட்டப்படும்.  குழித்துறை குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. 





பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. முடிவு விரைவில் அறிவிக்கப்படும். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளில் நல்ல நிலையில் உள்ள படகுகள் தமிழகத்திற்கு வந்துவிட்டது. பாழடைந்துள்ள படகுகளை மட்டுமே அழிக்க அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். 7.5 விழுக்காடு ஒதுக்கீடு என்பது அரசின் சட்டத்திற்கு உட்பட்டது. கேரள அரசுடன் நதிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வனப்பாதுகாப்பு சட்டம் அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. சென்னை மதுரவாயல் மேம்பால சாலை பணிகள் விரைவில் துவங்கும் எனவும் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 7,911 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

Post Top Ad