கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? - Asiriyar.Net

Post Top Ad


Thursday, January 30, 2020

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
தினந்தோறும் நமது உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை எந்த வகையில் உணவில் சேர்க்கப்பட்டிருந்தாலும் ஒதுக்கி வைத்து விடுகிறோம் அல்லது தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், உண்மையில் வெறும் நறுமணத்திற்காக மட்டும் நாம் கறிவேப்பிலையை உணவில் சேர்க்கவில்லை. அதன் சத்துக்களுக்காகவும் தான். அப்படி சேர்க்கப்படுகிற கறிவேப்பிலையை தினமும் பச்சையாக சமைக்காமல் அப்படியே சாப்பிட்டு வந்தால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று தெரியுமா?
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் 15 கறிவேப்பிலை இலைகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் தேவையற்ற கெட்டக் கொழுப்புகள் எல்லாக் கரைய ஆரம்பித்து விடும்.

வயிற்றை சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து தொப்பையை முழுவதுமாகவே குறைத்து விடும்.

கறிவேப்பிலையுடன் தினமும் ஒரு பேரீச்சம்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை நீங்கும். இப்படி சாப்பிட்டு வருவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் சீராக இருக்கும்.இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.
முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
அடிக்கடி சளி, இருமல், ஆஸ்துமா கொண்டவர்கள் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருக்கும் சளி வெளியேறி விடும்.

கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறி விடும். அதோடு கூட, கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும். அதனால் இனிமேலாவது கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாமல், மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பழக்கப்படுத்துங்கள்.

Recommend For You

Post Top Ad