ஓசூர் அருகே அரசுப் பள்ளி அருகே தண்ணீர் குட்டையில் தவறி விழுந்த மாணவரும், மீட்க முயன்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்தனர்.
ரூ.3 லட்சம் நிதியுதவி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தனியாருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் மூழ்கி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கவுரிசங்கர், நித்தின் ஆகியோர் உயரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இருவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment