ITK - Reading Marathon - முன்னணி நிலவரம் - Asiriyar.Net

Thursday, June 2, 2022

ITK - Reading Marathon - முன்னணி நிலவரம்

 



Google read along செயலி மூலம் நடை பெறும் ரீடிங் மாரத்தான் முதல் நாளில் ( ஜூன்1)  திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டாரம் மாநில அளவில் முதல் நிலையில் முன்னிலை பெற்றுள்ளது. லால்குடி வட்டாரத்தில் குழந்தைகள் இதுவரை 4,71,526 சொற்களைச் சரியாக வாசித்து உள்ளனர்.  அவர்களுக்கு வாழ்த்துக்கள். குழந்தைகள் 14,736 நிமிடங்களில்  2,873 கதைகள் வசித்துள்ளனர். 


திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டாரம், மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரம் ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை களில் முன்னிலை வகிக்கின்றன. 


மாநிலம் முழுவதும் குழந்தைகள் 3.34 கோடி சொற்களையும் சரியாக வசித்துள்ளனர். 15,847 மணி நேரத்தில் 2.03 இலட்சம் கதைகள் வாசிக்கப் பட்டுள்ளன.  


குழந்தைகளை உற்சாகப்படுத்தி வாசிப்பு ஆர்வத்தை ஊட்டுங்கள். 


அனைவருக்கும் வாழ்த்துகள்.

சிறப்புப் பணி அலுவலர் 

இல்லம் தேடிக் கல்வி


No comments:

Post a Comment

Post Top Ad