அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 12 பேர் குழுவை அமைத்து , மாநில கல்விக் கொள்கை வடிவமைக்க முதலமைச்சர் உத்தரவு! - Asiriyar.Net

Tuesday, April 5, 2022

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 12 பேர் குழுவை அமைத்து , மாநில கல்விக் கொள்கை வடிவமைக்க முதலமைச்சர் உத்தரவு!

 




தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர், வல்லுநர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக்கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.


இக்குழுவின் தலைவராக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


உறுப்பினர்கள்:

  1. பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்; 
  2. இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்;  
  3. பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்; 
  4. பேராசிரியர் இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்; 
  5. முனைவர் அருணா ரத்னம், முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்; 
  6. எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்; 
  7. விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சேம்பியன். 
  8. டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்;  
  9. துளசிதாஸ், கல்வியாளர்;
  10. முனைவர் ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்;
  11. இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்;
  12. ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை 

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இக்குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்''. 

 

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. 




No comments:

Post a Comment

Post Top Ad