தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்வி குழுமம் சார்பில், கல்லூரி வளாகத்தில், தமிழகத்தில் சிறந்த அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு, சாய்ராம் குழும தலைமை நிர்வாக அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து தலைமை தாங்கினார். இதில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, 200 பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1,123 ஆசிரியர்களுக்கு அப்துல்கலாம்-லியோ முத்து விருது வழங்கி பேசினார்.
பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றப்பட வேண்டாம். ஜாலியாக படியுங்கள். மன உறுதியோடு, நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். கொரோனா தொற்று காலத்தை மனதில் வைத்துதான், 6 மாதத்துக்கு முன் பாடப்பிரிவுகளை குறைத்துள்ளோம். தற்போது நடைபெறும் மாதிரி தேர்வுகள்தான், பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். நன்கு படித்தவர்களுக்கு கேள்விகள் சுலபமாக இருக்கும். படிக்காதவர்களுக்கு கடினமாக இருக்கும். மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காகத்தான், தற்போது திருப்புதல் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதை மனதில் வைத்து மாணவர்கள் பொறுப்போடு படிக்க வேண்டும்.இவ்வாற அவர் கூறினார்.விழாவில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment