குழந்தைகளுக்கு எந்த வயதில் கற்றுக்கொடுக்கத் தொடங்க வேண்டும்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 7, 2022

குழந்தைகளுக்கு எந்த வயதில் கற்றுக்கொடுக்கத் தொடங்க வேண்டும்?

 




இக்கால பெற்றோர்கள், கருவில் இருக்கும் குழந்தைகளுக்கே அறிவைப் புகுத்த முயற்சிக்கிறார்கள். குழந்தை வயிற்றில் இருக்கும்போதே குழந்தையின் தாயை அறிவுப்பூர்வமான விஷயங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 


அதுபோல குழந்தை பிறந்தவுடனே அவர்களுக்கு அவரவர் மொழியில் எழுத்துகளை சொல்லிக்கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர். இது சரியானது தானா? குழந்தைகளுக்கு எந்த வயதில் கற்றுக்கொடுக்கத் தொடங்க வேண்டும்? என்பதற்கு விடையளிக்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.  


ஆய்வில், 'சாதாரணமாக ஒரு குழந்தைக்கு எப்போது எழுத்துகளை கற்றுக்கொடுக்கத் தொடங்க வேண்டும் என்ற வரையறை இல்லை. எனினும், 'போனிக்ஸ்' எனும் எழுத்துகளின் உச்சரிப்பை சொல்லிக்கொடுக்க குழந்தைகளுக்கு சரியான வயது 3 முதல் 5 வயது. எழுத்துக்கள், எண்கள் மற்றும் அவற்றின் ஒலிகளை இந்த வயதில்தான் குழந்தைகளால் அடையாளம் காண முடியும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சரியாக, 3 வயதில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கிறோம். அப்போது கற்றுக்கொடுக்கத் தொடங்கினால் சரியானது. அதற்கு முன்னதாக சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அகர வரிசைப்படி குழந்தைகளுக்கு எழுத்துகள் கற்றுக்கொடுக்கும்போது அவற்றின் சரியான ஒலியையும் அந்த நேரத்திலேயே சேர்த்து கற்றுக்கொடுப்பதே சரியானது. 


ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றுக்கொள்ளும் வயதும் வேறுபடுகிறது.  குழந்தைகள் எழுத்துகளின் உச்சரிப்பை கற்றுக்கொள்ள 7 வயது வரை ஆகும். 


ஒலியை உச்சரிக்க கற்றுக்கொடுக்கும் முன் அந்த குழந்தைக்கு எழுத்துகளின் உச்சரிப்பை கேட்கச் செய்வது அவசியமானது. குழந்தைகள் அதனை அடிக்கடி கேட்க வேண்டும். அதன்பின்னரே சொல்லிக்கொடுக்க வேண்டும். இதனால் நீங்கள் சொல்லும்போது எளிதாக குழந்தைகள் அந்த உச்சரிப்பை உள்வாங்கி எதிரொலிக்கும். 


அடுத்த கட்டம், குறிப்பிட்ட ஒலிகள் அடங்கிய வார்த்தைகளை கற்றுக்கொடுப்பது. அந்த ஒலியால்தான் வார்த்தைக்கு அழுத்தம் கிடைக்கிறது எண்பதுபோலான வார்த்தைகளை சொல்லித் தர வேண்டும். 


எனவே, சிறு வயதில் குழந்தைகளிடம் கல்வியை திணிக்க வேண்டாம். எவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொடுக்கிறீர்கள் என்பதைவிட எந்த அளவுக்கு தெளிவாக திறமையாகக் கற்றுக்கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம். முன்னதாக குழந்தைகளுக்கு கற்றலின் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்க வேண்டும்.




Post Top Ad