15 DEO -கள் பதவி இறக்கம்? - Asiriyar.Net

Tuesday, January 4, 2022

15 DEO -கள் பதவி இறக்கம்?

 




பள்ளி கல்வித் துறையில் பதவி உயர்வு பெற்ற, டி.இ.ஓ.,க்களான மாவட்ட கல்வி அதிகாரிகள் 15 பேரை, திடீரென பதவி இறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு வகைகளில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். இதன்படி, டி.இ.ஓ., பதவி உயர்வு பெற்ற 15 பேரை, மீண்டும் தலைமை ஆசிரியர்களாக திடீரென பதவி இறக்கம் செய்வதற்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.


இது குறித்து, பள்ளி கல்வி அலுவலர்கள் தரப்பில் கூறியதாவது:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, டி.இ.ஓ.,க்கள் 20 பேர் நேரடி நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான துறை ரீதியான பயிற்சி நிறைவு பெற உள்ளது. அவர்களுக்கு டி.இ.ஓ., பணியிடம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, டி.இ.ஓ., பதவியில் ஐந்து காலியிடங்கள் மட்டுமே உள்ளன.


மீதமுள்ள 15 பேருக்கு பணியிடங்களை ஒதுக்க முடியாத நிலை உள்ளது. இதை சமாளிக்க, ஏற்கனவே பதவி உயர்வு பெற்று பணியாற்றும், 15 டி.இ.ஓ.,க்களை தலைமை ஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்து விட்டு, அந்த இடத்தில் பயிற்சி முடித்தோரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதனால், பதவி உயர்வு பெற்ற டி.இ.ஓ.,க்கள் கலக்கத்தில் உள்ளனர்.



No comments:

Post a Comment

Post Top Ad