1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - தமிழக அரசு - Asiriyar.Net

Saturday, January 1, 2022

1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - தமிழக அரசு

 




தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடுநிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் பள்ளிகள் தினசரி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.





இதற்கிடையே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று, புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் 1,270 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் - அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!


இந்நிலையில்  சென்னை தலைமை செயலகத்தில், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:


மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.


9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும். வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click Here To Download - TN Press News 31.12.2021 - Pdf






No comments:

Post a Comment

Post Top Ad