ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2021-2022ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு
ஆணை :
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2019-2020-ஆம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் நலத் துறை ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கான கலந்தாய்வு பொது மாறுதலில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
2 மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட ஆதி திராவிடர் நல ஆணையரின் கடிதத்தில், 2019-2020 மற்றும் 2020-2021-ஆம் கல்வியாண்டுகளில் உலகளாவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆதி திராவிடர் நலப் பள்ளி மற்றும் விடுதி ஆசிரியர் / காப்பாளர்களுக்கான கலந்தாய்வு பொதுமாறுதல்கள் நடைபெறவில்லை எனவும், தற்போது பள்ளிகள் செயல்படத் தொடங்கிவிட்ட நிலையில் 2021-2022-ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் / காப்பாளர் கலந்தாய்வு பொதுமாறுதல்களை நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்திட, உரிய ஆணைப் பிறப்பிக்குமாறு கோரி, கலந்தாய்வு பொது மாறுதலின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசுக்கு தொகுத்து அனுப்பியுள்ளார்.
3, ஆதி திராவிடர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதன் அடிப்படையில், 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான ஆதி திராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பொது மாறுதல்களை online மூலமாகவும், மற்றும் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்களுக்கான பொது மாறுதல்களை நிருவாகக் காரணம் கருதி நேரடியாகவும் நடத்திட ஆதி திராவிடர் நல ஆணையருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுவதுடன், இக்கலந்தாய்வு பொது மாறுதலின்போது கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு ஆதி திராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.
பொதுவான நடைமுறைகள்
அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு தனியே பயனர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) தரப்பட வேண்டும்.
கலந்தாய்விற்கான காலிப் பணியிடங்கள் மாவட்ட வாரியாக இதற்கென உருவாக்கப்பட்ட மென்பொருளில் (Software) பதியப்பட வேண்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர், காப்பாளர் ஒவ்வொருவரும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட Login -இல் விண்ண ப்பங்கள் தனியராலேயே பதிவு செய்யப்பட வேண்டும். பதியப்பட்ட விண்ண ப்பம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு ஒப்பமிடப்பட்ட நகல் தனியரிடம் வழங்கப்பட வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகள்
மூன்று வருடங்களுக்கு மேல் அரசுப் பணியாளர்கள் ஒரே பணியிடத்தில் பணியாற்றக் கூடாது என்ற பொதுவான ஆணை. ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் பணிபுரியும் பணியிடங்கள் நிருவாகப் பணியிடங்கள் அல்ல என்பதால் இந்த ஆணை கடைபிடிக்கப்படுவதில்லை. இதே முறை தற்போதும் தொடரலாம்.
III. இடைநிலை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் | தமிழ்ஆசிரியர் | கணினி பயிற்றுநர் / துவக்க / நடுநிலை / உயர்நிலை ! மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் காலிப் பணியிட விவரங்கள் ஆதிதிராவிடர் நல ஆணையரது அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தகவல் பலகையில் கலந்தாய்வு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஒட்டப்பட்டு அறிவிப்பு செய்யப்பட வேண்டும். மாவட்ட தேசிய தகவல் மைய இணையதளத்திலும் வெளியிட வேண்டும். கலந்தாய்வு குறித்த செய்தியினை செய்தித் தாள்களில் வெளியிடப்பட வேண்டும்.
IV.
காலிப் பணியிடங்களுக்கு மாறுதல் கோரும் ஆசிரியர்கள் தங்களுடைய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். முழுமையான விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படக் கூடாது. மேற்கண்ட விவரங்கள் ஆதி திராவிடர் நல ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத் தகவல் பலகையில் ஒட்டி அறிவிப்பு செய்யப்பட வேண்டும். மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட முன்னுரிமைப்படி பரிசீலனை செய்யப்பட வேண்டும்:
(1) மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் கோரிக்கைகள், (2) பிற மாவட்டங்களிலிருந்து மாவட்ட மாறுதல் வழங்கி ஒதுக்கீடு செய்யப்படுவோரின் கோரிக்கைகள்.
VI. பணிக்காலம் பணி மாறுதல் கோரும் ஆசிரியர்கள், பணிபுரியும் இடத்தில் 31052021 அன்றைய நிலையில் ஓராண்டு கட்டாயம் பணி முடித்திருக்க வேண்டும்.
கீழ்க்காணும் பிரிவினர்களுக்கு ஓராண்டு பணிக் காலத்திலிருந்து விலக்களிக்கலாம்:
(அ) இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவி தங்களின் சொந்த பாதுகாப்பு கருதி மாறுதல் கோரும்போது, (ஆ) முற்றிலும் கண் பார்வையற்றவர்கள் (Total Blindness),
(இ) மூன்று சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள். (ஈ) இருதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள். (உ) கடுமையாக பாதிக்கப்பட்ட புற்று நோயாளிகள்.
(ஊ) பணி நிரவல் மூலமாக பிற பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்பட்டவர்கள். (எ) விதவைகள்.
VII. ஒரு காலிப் பணியிடத்திற்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கோரினால் கீழ்க்கண்ட வழிகாட்டுதலைப் பின்பற்றி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்
(i)இந்திய இராணுவத்தில் பணிபுரியும் பணியாளர்களின் கணவன் மனைவியர்,
(ii)முற்றிலும் கண் பார்வையற்றவர்.(Total Blindness)
(iii) விதவைகள் நாற்பது வயதைக் கடந்த திருமணம் செய்துகொள்ளாத முதுநிலை கன்னியர்
(iv) மூன்று சக்கர வண்டியில் பயணம் செய்யும் அளவிற்கு உள்ள மாற்றுத் திறனாளிகள். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு ஊன்று கோல் உதவியுடன் (Using Caliper) மெதுவாக செல்லக்கூடிய நிலையில் உdள மாற்றுத் திறனாளிகள்
(vi) இருதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.
{vi) கடுமையாக பாதிக்கப்பட்ட புற்று நோயாளிகள்.
(vii) மன வளர்ச்சி குன்றிய மற்றும் உடல் குறைபாடுகளுடைய குழந்தைகளின் பெற்றோர்.
(viii) 50 விழுக்காட்டிற்கு கீழ் ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றவர்கள்.
(ix) கணவன் மனைவி இருவரும் பணியில் இருக்கும் நேர்வுகளில் அந்த தம்பதியினர் (கணவன் /மனைவி) 30 கி.மீ. சுற்றளவு தூரத்திற்குள் உள்ள இடத்தில் பணிபுரியும் பட்சத்தில் அவர்கள் Separation எனக் கருதி கணவன் ! மனைவி முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது. கணவன் மனைவி என்ற முன்னுரிமை மைய அரசு | மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கென அதிகாரமளிக்கப்பட்ட உரிய அலுவலர்களால் பணிச்சான்று வழங்கப்பட வேண்டும். இதில் மைய அரசு / மாநில அரசு / பொதுத்துறை நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது.
(x) புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தவிர ஒரே இடத்தில் குறைந்த பட்சம் ஓராண்டு அதற்கு மேலும் பணியாற்றிய ஆசிரியர்கள்.
VIII. சிறப்பு நிகழ்வு
கணவன் அல்லது மனைவி திடீரென்று விபத்திலோ அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்தாலோ அத்தகைய ஆசிரியர்கள் குறித்த நிகழ்வுகளில் கலந்தாய்வு குறித்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சிறப்பு நிகழ்வாகக் கருதி மாறுதல் வழங்கலாம். TX. கலந்தாய்வு (Counselling) a) இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் | பட்டதாரிஆசிரியர் தமிழ் ஆசிரியர் ; காப்பாளர் காப்பாளினி தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கான மாவட்டத்திற்குள்ளான மாறுதல்கள் ஆதி திராவிடர் நல ஆணையரால் ஒப்புதல் வழங்கப்பட்டு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவரால் பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்களும் ஏனைய பிற ஆசிரியர் காப்பாளர்களுக்கான மாவட்ட மாறுதல்களும் ஆதி திராவிடர் நல ஆணையரால் வழங்கப்பட வேண்டும்,
ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு மாவட்ட அளவில் பணி மூப்பு பராமரிக்கப்படுவதால் இப்பதவியில் பணிபுரிவோர் மாவட்ட மாறுதல் கோர இயலாது. அவ்வாறு கோரும் பட்சத்தில் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் இடைநிலை ஆசிரியராகவும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராகவும் பதவியிறக்கம் பெற எழுத்து மூலமாக சம்மதித்து கடிதம் அளித்த பின்பே அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும்,
நிருவாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் மாறுதல்கள் குறித்த " புகாரில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே மாறுதல் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட கோப்பில் இது சார்பான விவரம் பதிவு செய்யப்பட வேண்டும். பொது மாறுதல்களுக்குப் பின் நிருவாகக் காரணங்களுக்காக மாறுதல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அனைத்து ஆதாரங்களுடன் உரிய முன்மொழிவை ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுப்ப வேண்டும். ஆணையராலேயே முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு, அவசியம் என அறியப்பட்டால் மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பின் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் எவ்வித மாறுதல் ஆணையும் வழங்கக்கூடாது. தவறும் பட்சத்தில், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இடைநிலை ஆசிரியர் - பட்டதாரி ஆசிரியர் / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள், பணியில் சேர்ந்து இரண்டாண்டு முடிந்த பின்னர் அவர்கள் மாறுதல் கோரும் மாவட்டத்தில் பள்ளிகளில் காலி இடம் இருப்பின் மாறுதல் செய்யப்படலாம்.
ஏற்கனவே புகாரின் பேரில் நிருவாகக் காரணங்களுக்காக மாற்றப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து விண்ணப்பிக்கலாம். ஆயினும், ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்கக் கூடாது. கோரிக்கையின் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு மாறுதல் கோர இயலாது. பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்கள், சொந்த மாவட்டத்தில் பணி நிரவல் காரணமாக வேறு மாவட்டத்திற்கு சென்றவர்கள் ஆகியவர்களுக்கு இந்த குறைந்தபட்ச கால அளவு பொருந்தாது.
மனமொத்த மாறுதல்களைப் பொறுத்தமட்டில், கலந்தாய்வு பொது மாறுதல் நடைபெறுவதற்கு முன்னர் செய்து முடிக்க வேண்டும். மனமொத்த மாறுதலில் ஏற்கனவே பயனடைந்தவர்களை திரும்பவும் அதே இடத்திற்கு மீண்டும் மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்க கூடாது. மனமொத்த மாறுதல்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணிக்காலத்தை கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பட்டதாரி / இடைநிலைக் காப்பாளராக மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியவர்கள் மீது புகார்கள் ஏதும் வரப்பெற்றால் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு புகார் உண்மை எனக் கண்டறியப்பட்டால் அவ்வாறான நபர்கள் விடுதி பொறுப்பு இல்லாத வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட வேண்டும். ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு காப்பாளினிகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் காப்பாளர்களை நியமிக்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் காப்பாளினிகளை பணி மாறுதல் கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்திடக் கூடாது.
சில மாவட்டங்களில் விடுதிகளின் எண்ணிக்கை குறைவாகவும், பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. சில மாவட்டங்களில் விடுதிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. எனவே 3 ஆண்டுகள் தொடர்ந்து விடுதிகளில் பணிபுரிந்த காப்பாளர் காப்பாளினிகளை பள்ளிகளில் ஆசிரியராக பணியிட மாறுதல் செய்யப்படுகின்ற நேர்வில் நிருவாக ரீதியாக ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களால் பரிசீலிக்கப்பட்டு பணியிட மாறுதல் வழங்கலாம். காப்பாளர்கள் காப்பாளினிகளின் மூன்றாண்டுகள் பணிக் காலத்தை அவர்கள் காப்பாளர் காப்பாளினியாக பணியில் சேர்ந்த நாளினை கணக்கில் எடுத்து கொள்ளாமல் மூன்று கல்வியாண்டுகள் முடிந்ததை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
பொறுப்பு காப்பாளர் காப்பாளினி நியமனங்கள் மற்றும் மாற்றுப்பணி நியமனங்கள் நேர்வில் தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் உரிய முன்மொழிவுகளை ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுப்பி ஆணையர் அவர்களால் ஆணை வழங்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆணை வழங்குதல் கூடாது, மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்களின் பெயர்களை இனம் (V) இல் கண்ட முன்னுரிமையின்படி பட்டியல் தயாரித்து அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வுக்கு (Counselling) வரவழைத்து அவர்களிடம் தகுதியுள்ள காலிப் பணியிடங்களின் பட்டியலைக் கொடுத்து அவர்கள் விரும்பிய இடத்திற்கு மாறுதல் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கும் போது மாறுதலால் ஏற்படும் காலிப் பணியிடத்தையும் அவ்வப்போது பட்டியலில் சேர்த்து அடுத்து முன்னுரிமைப்படி வரும் ஆசிரியர்களின் விருப்பத்தினைப் பெற்று மாறுதல்கள் வழங்கப்பட வேண்டும்.
மேற்படி முறையால் விண்ணப்பத்தில் குறிப்பிடாத பள்ளிகளில் காலிப் பணியிடம் இருந்து அதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்தால் வழங்கலாம். மாறுதல் ஆணைகள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரம் அறிவிப்புப் பலகையில் தெளிவாக வெளியிடப்பட வேண்டும். 2002.2003 ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் அவர்கள் நியமனம் பெற்ற மாவட்டத்தில் பணிவரன்முறை செய்யப்பட்டு தகுதிகாண் பருவம் முடிக்கப்பட்ட நிலையில் வேறு மாவட்டத்திற்கு மாறுதல் அளிப்பது குறித்து பரிசீலிக்கப் படவேண்டும்.
கலந்தாய்வு நாளன்றே மாறுதல் உத்தரவு அளிக்கப்பட வேண்டும். கலந்தாய்வின்போது இடையூறு விளைவிக்கும் அல்லது கலந்தாய்வைத் தடுக்கும் ஆசிரியர்கள் இதர பணியாளர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
இத்துறை நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் பணி ஓய்வு / பதவி உயர்வால் ஏற்படும் நிரந்தரமான காலிப் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டு, பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. எனவே, 6, 7, 8 வகுப்புகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மேற்படி நிரந்தர பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு மாறுதல் பெற இயலாது,
இத்துறை நடுநிலை | உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியரைக் கொண்டு நிரப்பப்பட்டவுடன் அப்பணியிடம் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடமாகவே கருதப்படும்.
ஆதிதிராவிடர் நலத்துறையை பொறுத்தமட்டில் ஆசிரியர் பணியிட மாறுதல்கள், கலந்தாய்வு (Counselling) முறையில் அவ்வாசிரியப் பெருமக்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி செய்யப்படுவதால், "மாறுதல் பயணப்படி" போன்ற எந்தவித செலவினமும் அரசுக்கு ஏற்படக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது, மேலும் அனைத்து பதவிகளுக்குமான கலந்தாய்வுகள் ஆதி திராவிடர் நல ஆணையர் தலைமையில் உள்ள குழுவால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். சிறப்பு நிகழ்வுகள் எனக் கருதப்படும் இனங்களில், குறிப்பாக, ஓராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் இருப்பதை நடைமுறைப்படுத்தவும், நிருவாக ஒழுங்கிற்கு அவசியம் எனக் கருதப்படும் நிலையில் நிருவாகக் காரணங்களுக்காகவும், ஆதி திராவிடர் நல ஆணையரால் மாறுதல் ஆணைகள் வழங்கப்பட வேண்டும். மாணாக்கரின் கல்வி நலன் பாதிக்காத வண்ணம் பொது கலந்தாய்வு மாறுதல் குறித்த கால அட்டவணையை தயார் செய்து, அதன் அடிப்படையில் கலந்தாய்வு பொது மாறுதலை விரைந்து முடிக்கலாம். அனைத்து பதவிகளுக்குமான கலந்தாய்வுகள் சென்னையில் ஆதி திராவிடர் நல ஆணையர் தலைமையில் உள்ள குழுவால் கண்காணிக்கப்படவேண்டும்.
4. 20212022-ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட தேவைப்படும் தொகையினை, 2021-2022-ஆம் நிதியாண்டில், ஆதி திராவிடர் நல ஆணையரக சில்லரைச் செலவினக் கணக்குத் தலைப்பின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ள ஆதி திராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.
5. அனைத்துப் பதவிகளுக்குமான பொது மாறுதல்கள் குறித்த கலந்தாய்வுப் பணிகளை விரைந்து முடித்து இதுகுறித்த அறிக்கையினை அரசுக்கு அனுப்பவும் ஆதி திராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.
//ஆளுநரின் ஆணைப்படி//
க.மணிவாசன் அரசு முதன்மைச் செயலாளர்
Click Here To Download - GO : 162 - ADW Counselling - 2021-2022 - Norms - Pdf
No comments:
Post a Comment