G.O 48 - EL Surrender - மேலும் ஒரு ஆண்டு 31-03 -2022 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - அரசாணை
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஈட்டிய விடுப்புக்கு சம்பளம் வழங்குவது, மேலும் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால், ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் மிச்சமாகும்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க, மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த, பெரும் நிதி தேவைப்படுவதால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதை ஏற்று ஏராளமானோர் நிதி வழங்கி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவல் துவங்கிய போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு, அதாவது விடுப்பு எடுக்காத நாட்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மேலும் ஓராண்டுக்கு, 2022 மார்ச் 31 வரை, ஈட்டிய விடுப்புக்கு சம்பளம் வழங்கப் படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு அரசு ஊழியரும், ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்புக்கான சம்பள தொகையை பெறுவர். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள், ஈட்டிய விடுப்பு நிறுத்தப்படுவதால் அரசுக்கு 6,000 - 7,000 கோடி ரூபாய் வரை மிச்சமாகும்.
No comments:
Post a Comment