மதுரையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது: அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப்பணியாளர்களுடன் அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த நோயை எதிர்கொள்ள உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த போதிய நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டிய நிலையுள்ளது. தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள், சிறப்பு காலமுறை சம்பளத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ஒரு நாள் சம்பளம் ரூ.150 கோடியை கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர் களுக்கு ஜாக்டோ ஜியோ பாராட்டுதல்களை தெரிவித்துகொள்கிறது. இப்பணியாளர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க சானிட்டைசர், முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment