தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் - Asiriyar.Net

Friday, May 7, 2021

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

 







முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளராக இருந்துள்ளார்


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச் சந்திரன், உமாநாத், அனு ஜார்ஜ், எம்.எஸ் சண்முகம் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.


இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக முதலமைச்சராக ஸ்டாலினை பதவியேற்க அழைப்பு விடுத்தார். இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர்.



அதனைத்தொடர்ந்து, தலைமை செயலத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு முதல் கையெழுத்தாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுதிட்டுள்ளார். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல்கட்டமாக ரூ.2000 இந்த மாதமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதைத்தொடர்ந்து, நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் உள்ளட்ட 5 முக்கிய அரசாணைகளை அவர் பிறப்பித்துள்ளார்.


இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஈரோடு, மதுரை மாவட்டங்களில் ஆட்சியராக இருந்துள்ளார்.



மேலும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், தமிழகச் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்துள்ளார். கீழடி அகழாய்வில் இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது.


இரண்டாவது செயலாளராக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா நாத் ஐஏஎஸ், கோவை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். மருந்துகள் துறையில் பணிபுரிந்துள்ளார். மூன்றாவது செயலாளராக எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ், தற்போது அருங்காட்சியகம் துறை ஆணையராக உள்ளார். நான்காவதாக அனு ஜார்ஜ் ஐஏஎஸ், இவர் தற்போது தொழித்துறை ஆணையராக உள்ளார்.











No comments:

Post a Comment

Post Top Ad